• Fri. Jan 9th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தேசிய நல்லாசிரியர் விருது!..

By

Aug 18, 2021

மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் கீழ் ஆண்டுதோறும் வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கான பட்டியலில் இந்தாண்டு தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியைகள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.மேலும் புதுச்சேரியை சேர்ந்த ஆசிரியர் ஒருவருக்கும் இந்த விருது வழங்கப்படவுள்ளது.


2021 – ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதை இந்தியா முழுவதும் 44 பேர் பெற இருக்கிறார்கள். அதில் திருச்சி மாவட்டம் பிரதியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை கே.ஆஷா தேவி மற்றும் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை டி.லலிதா ஆகியோர் தமிழகம் சார்பில் தேசிய நல்லாசிரியர் விருதிற்காக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்..