


விண்வெளி மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் என்று நாளை பூமி திரும்பவார்கள் என்று நாசா கூறியுள்ளது.
அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், கனடா ஆகிய நாடுகள் இணைந்து கடந்த 1998-ம் ஆண்டு நவம்பரில் விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்தன. இது, பூமியில் இருந்து சுமார் 460 கி.மீ. தொலைவில் உள்ளது. மணிக்கு 28,000 கி.மீ. வேகத்தில் பூமியைச் சுற்றி வருகிறது. இந்த சூழலில் அமெரிக்காவின் போயிங் நிறுவனம், ஸ்டார்லைனர் என்ற விண்கலத்தை தயாரித்தது. புதிய ஸ்டார்லைனர் விண்கலத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோர் கடந்த ஆண்டு ஜூன் 5-ம் தேதி ஐஎஸ்எஸ் நிலையத்துக்கு சென்றனர்.

இவர்கள் 10 நாட்கள் ஆய்வு செய்துவிட்டு பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருவரும் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி ஸ்டார்லைனர் விண்கலம் ஆட்கள் இன்றி வெறுமையாக பூமிக்கு திரும்பியது.இதனால்
சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கித் தவிப்பவர்கள் பூமிக்கு திரும்பும் புதிய தேதியை அமெரிக்காவின் தேசிய விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.
கடந்த ஒன்பது மாதங்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கித் கொண்டிருக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாளை (மார்ச் 18) பூமிக்கு திரும்புவர் என்று நாசா அறிவித்துள்ளது. இதனிடையே நேற்று அதிகாலை சர்வதேச விண்வெளி மையத்தில் வெற்றிகரமாக இணைந்த ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோருடன் மற்றொரு அமெரிக்க விண்வெளி வீரர், ரஷிய விண்வெளி வீரர் ஆகியோரும் பூமிக்கு திரும்பவுள்ளனர். நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், விண்வெளி வீரர்கள் நாளை உள்ளூர் நேரப்படி மாலை 5.57 மணிக்கு (இந்திய நேரப்படி மார்ச் 19-ம் தேதி அதிகாலை 3.27 மணி) ஃபுளோரிடா கடற்பகுதி அருகே தரையிறங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

