• Thu. Dec 12th, 2024

நட்சத்திரம் நகர்கிறது காதலைப் பற்றிய படம் – பா.ரஞ்சித்

நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் தன் பாலின காதல், உறவை பற்றிய படம் என்று ஊடகங்களில் செய்தி வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அதற்கு எதிர்மறையாக தன் படம் பற்றிய கருத்தை கூறியுள்ளார் ரஞ்சித்

பா.இரஞ்சித் சார்பட்டா பரம்பரரை படத்திற்கு பிறகு “நட்சத்திரம் நகர்கிறது” எனும் படத்தை இயக்கி உள்ளார்யாழி பிலிம்ஸ் விக்னேஷ்சுந்தரேசன், மற்றும் மனோஜ் லியோனல்ஜாசன் இந்தபடத்தை தயாரித்திருக்கிறார்கள்.ஆகஸ்ட் 31 அன்று வெளியாகவிருக்கும் இந்த படத்தில்காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன், ஹரி, ஷபீர், சார்லஸ்வினோத், வின்சு , சுபத்ரா, தாமு உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
குண்டு படத்திற்கு ஒளிப்பதிவு செய்த கிஷோர் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
தென்மா இசையமைத்திருக்கிறார்

ஆகஸ்ட் 31 அன்று நட்சத்திரம் நகர்கிறது படம் வெளியாக உள்ளதை முன்னிட்டு படத்தை புரமோஷன் செய்யும் வேலைகளை தொடங்கியுள்ளார் பா.ரஞ்சித்
படம் பற்றி அவர் கூறியிருப்பதாவது
“நட்சத்திரம் நகர்கிறது ” காதல் படம் அல்ல காதலைப்பற்றிய படம்.
ஆணும் பெண்ணும் சந்திக்கும்பொழுது காதலாகத்தான் ஆரம்பமாகுது.
அது குடும்பத்துக்கு தெரியும்பொழுதுதான் சமூகத்தின் பிரச்சினையாக மாறுகிறது.
இங்கே காதலுக்கு ஒரு மதிப்பீடு இருக்கு.காதல் வர்க்கத்தையும் ஜாதியையும்பின்னிபிணைந்ததாக இருக்கிறது. காதல் பெர்சனலாக இருக்கும்பொழுது எந்த பிரச்சினையும் இல்லை .
இப்போ காதலை ஒரு பொலிட்டிக்கல் டெர்ம் ஆக மாற்றி வச்சிருக்காங்க. அதை பற்றி விவாதிக்கிற படம்தான் “நட்சத்திரம் நகர்கிறது”
இதில் ஆண் பெண் காதல்கள் மட்டும் இல்லாது ஒரு பாலின காதலைப்பற்றியும்,
திரு நங்கையின் காதலைப்பற்றியும் பேசுகிறோம்.

பாண்டிச்சேரியில் நாடக தியேட்டரில் நடிக்கக்கூடுகிற நடிகர்கள் அவர்களின் எமோஷ்னல், காதலை விவரிக்கிறது இந்தப்படம்.
ஒரு காதலை குடும்பமும் சமூகமும் எப்படிப்பார்க்கிறது என இந்த படம் முழுக்க பேசுகிறோம்.

நவீன சினிமாவின் தாக்கத்தில் எழுதியிருக்கிறேன். நல்லா வந்திருக்கு.நட்சத்திரம் நகர்கிறது படம் இதுவரை நான் எழுதி எடுத்த சினிமாவில் இது மாறுபட்டு இருக்கும்.என்னுடைய சினிமா வாழ்க்கையிலும் இது முக்கியமான படமாக இருக்கும் என்று பா. இரஞ்சித் கூறினார் .