
விருமன் திரைப்பட வெற்றி கொண்டாட்டம் .நடிகர் கார்த்தி, சூரி, நடிகை அதீதி சங்கர் , இயக்குனர் முத்தையா உள்ளிட்டோர் திரையரங்குகளில் ரசிகர்களை சந்தித்தனர்.
மதுரையில் விருமன் திரைப்பட திரையிடப்பட்டுள்ள திரையங்குகளில் ரசிகர்களை சந்தித்து நடிகர் கார்த்தி பேசுகையில் : இங்கு வந்தது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. சென்னையில் கூட வெற்றியை கொண்டாவில்லை, இங்கு வந்து கொண்டாடினால் திருப்தி என்பதால் மதுரைக்கு வந்துள்ளோம். பருத்திவீரனுக்கு பின்னர் லோக்கலா இது போன்ற படத்தில் நடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. வெற்றியையும் பெற்றுதந்துள்ளது. மதுரை ரசிகர்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி, திரையரங்குகளுக்கு பொதுமக்கள் வருகை தர தொடங்கியுள்ளனர் என்பது விருமன் வெற்றி காட்டியுள்ளது. ரசிகர்களின் அன்புதான் எங்கள் உயிர் , விருமன் படத்தை வெற்றியடைய செய்த ரசிகர்களுக்கும் , திரையரங்கு நிர்வாகிகளுக்கும் ஊழியர்களுக்கும் நன்றி என தெரிவித்தார்.
