• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்து பட்டாசு ஆலை உரிமையாளர்களின் கோரிக்கை..,

ByK Kaliraj

Apr 8, 2026

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெம்பக்கோட்டையில் தமிழன் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகளை சாத்தூர் சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்து பட்டாசு ஆலை உரிமையாளர்களின் கோரிக்கையை கேட்டறிந்தனர்.

தொடர்ந்து தனக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்குமாறும் உங்களுடைய பிரச்சனையை முழுமையாக தீர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பேன் என பட்டாசு ஆலை உரிமையாளர்களிடம் கூறினார்.

கோரிக்கை கேட்டறிந்த வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு பட்டாசு ஆலை உற்பத்தியாளர்கள் நன்றி தெரிவித்தனர். நிகழ்ச்சியில் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் பயில்வான் சந்தோஷ் குமார் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.