சமந்தா மற்றும் நாசசைத்தன்யா இருவரும் 7 வருட காதலுக்கு பிறகு, 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். சமந்தா திருமணத்திற்கு பிறகும் பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.
சமந்தா மற்றும் நாகசைத்தன்யா இருவரும் பிரிவதாக இணையத்தில் கிசுகிசுக்கப்பட்ட நிலையில், திடீரென ஒரு நாள் பிரிவதாக அறிவித்தனர். இவர்களின் பிரிவுக்கு காரணம் குறித்து ஏராளமான வதந்திகள் வெளிவந்தன! இந்நிலையில், சமீபத்தில் சமந்தா திருமண புடவையை நாகசைத்தன்யாவின் குடும்பத்திடம் ஒப்படைத்துவிட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நாகசைத்தன்யாவை சமந்தா unfollow செய்துள்ளார்.
இருப்பினும், நாக சைத்தன்யா அவரை unfollow செய்யவில்லை. அதே போல அவரின் குடும்ப உறுப்பினர்களான நாகார்ஜூன், அமலா மற்றும் அகில் ஆகியோரும் சமந்தாவை பாஃலோ செய்தே வருகின்றனர். நாகசைத்தன்யா சமந்தாவை மானசீகமாக தற்போதும் நேசித்து வருகிறார் என்பதற்கு இந்த ஒரு ஆதாரம் போதாதா? என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.