• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விக்ரம் படத்தில் அமிதாப் ஜி?

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தை கமலுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கி வருகிறார். 4 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகப் போகும் கமல் படத்திற்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

கமல்ஹாசன் உடன் இந்த படத்தில் விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் மற்றும் நரேன் உள்ளிட்ட தென்னிந்தியாவின் தலை சிறந்த நடிகர்கள் நடித்து வருகின்றனர். இதுவரை படம் தொடர்பாக வெளியான அத்தனை புரமோஷன் காட்சிகளும் வெறித்தனமாக இருந்த நிலையில், தற்போது கசிந்துள்ள ஹாட் அப்டேட் வேற லெவலாக அமைந்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருக்கிறாராம் அமிதாப் பச்சன். பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கிளைமேக்ஸ் காட்சியில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்றும் அவரிடம் ஒரு நாள் கால்ஷீட் கேட்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் 4 முதல் 6 மணி நேரத்தில் அவரது ஷூட்டிங்கை முடித்து விட்டார் என்றும் நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சீக்கிரமே அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.