• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

வேட்புமனு தாக்கல் செய்தார் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்..!!

ByA.Tamilselvan

Feb 2, 2023

ஈரோடு இடைத்தேர்தலில் இன்று நாம் தமிழர் கட்சியி வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்தார்.
ஈரோடு இடைத்தேர்தல் இந்த மாதம் 27-ந் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2ம் தேதி எண்ணப்படுகிறது. தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இதேபோன்று தேமுதிக சார்பில் ஆனந்த், அமமுக சார்பில் சிவபிரசாந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இன்னிலையில் ஈபிஎஸ் தரப்பு அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ தென்னரசு, ஓ.பி.எஸ் தரப்பில் முருகானந்தம் என்பவரும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 31-ம் தேதி தொடங்கிய நிலையில் பிப்ரவரி 7-ந் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளில் 4 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். 2-ம் நாளான நேற்று தேமுதிக வேட்பாளர் ஆனந்த் உட்பட 5 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்தனர். இந்நிலையில் இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.