தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மறுப்பதை கண்டித்தும், நெய்வேலி ஆர்ச்.கேட் அருகே கடலூர் ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க. சார்பில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது:- நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அல்லும் பகலும் பாடுபட்டு வீடுகளை இழந்தும், நிறுவனத்தின் வளர்ச்சிக்காக உதவியிருக்கும் மண்ணின் மைந்தர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு என்.எல்.சி. நிறு வனத்தில் 299 என்ஜினீயர்கள் பணிநியமனம் செய்யப்பட்டனர். இதில் ஒருவர் கூட தமிழர்கள்இல்லை. தமிழர்களின் உரிமையை பறிக்கும் என்.எல்.சி. நிர்வாகத்தை வண்மையாக கண்டிக்கிேறாம். இதே நிலை நீடித்தால் என்.எல்.சி. நிர்வாகத்துக்கு பூட்டு போடுவோம். தமிழர்களின் உரிமைகளுக்காக எனது உயிர் உள்ளவரை என்றும் பாடுபடுவேன். பா.ம.க. ஜாதி, மத பேதமின்றி ஒட்டு மொத்த தமிழர்களின் நலனுக்காக என்றென்றும் பாடுபடும். இவ்வாறு அவர் பேசினார்.