• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இளைஞரின் தலையை துண்டித்து வீட்டு வாசலில் வீசிச்சென்ற மர்ம நபர்கள் : போலீசார் வலைவீச்சு

By

Sep 15, 2021

படப்பை அருகே இளைஞரின் தலையை துண்டித்து வீட்டு வாசலின் முன்பு மர்ம நபர்கள் வீசிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

படப்பை அடுத்த சோமமங்கலம் எருமையூர் அருகே நேற்று இரவு அப்பகுதியில் உள்ள வீட்டு வாசலின் முன்பு இளைஞர் ஒருவரின் தலை மட்டும் துண்டிக்கபட்ட நிலையில் இருந்ததை கண்ட அக்கம்பக்கத்தினர் சோமமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் துண்டிக்கபட்ட தலையை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து ,முதற்கட்ட விசாரனையில் அதே பகுதியில் உள்ள கிறிஸ்துராஜா கோவில் தெருவைச் சேர்ந்த வெற்றிவேல் என்பதும் முன்விரோதம் காரணமாக கொலை செய்யபட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.