• Thu. Mar 28th, 2024

உள்ளாட்சி தேர்தல் இன்று முதல் வேட்புமனு தாக்கல்

By

Sep 15, 2021 ,

உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது.

தமிழக்தில் புதிதாக அமைக்கப்பட்ட வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதி என இரண்டு கட்டமாக நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் அறிவித்துள்ளார்.

இதனையடுத்து, இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது. வருகிற 22-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும். 23-ந் தேதி காலை 10 மணிக்கு வேட்பு மனு பரிசீலனை செய்யப்படும். 25-ந் தேதி பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுவை திரும்ப பெற்று கொள்ளலாம். மேலும், ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை, அக்டோபர் 12ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்காட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *