• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மாவட்டச் செயலாளர் வீட்டிற்குள் மர்மமாக உயிரிழப்பு..,

ByG. Anbalagan

Apr 16, 2025

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள மேல் கொட்டரகண்டி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (60). இவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய பெற்றோர் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு இவருடைய மனைவி, இவரை பிரிந்து சென்று விட்டதாலும் இவர் அப்பகுதியில் வாடைகை வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இவர் தற்போது நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்ட செயலாளராக செயல்ப்பட்டு வருகிறார். இந்தநிலையில் இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் மஞ்சூர் காவல் நிலையத்திற்க்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான போலீசார் நேரில் சென்று பார்த்தபோது ராஜ்குமார் வீட்டில் இறந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார். மேலும் அவர் இறந்து ஒரு சில நாட்கள் இருக்கலாம் என்பது தெரிய வந்தது. மேலும் சம்பவம் குறித்து காவல் துறையினர் அக்கம் பக்கத்தில் வசித்து வருபவர்களிடம் விசாரணை செய்து வருகிக்றனர். ராஜ்குமாரின் உடல் அழுகிய நிலையில் இருந்ததால் இயற்கை மரணமா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.