இயக்குனர் வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது மாநாடு. இந்நிலையில் அவரின் அடுத்த படம் என்ன என்பது குறித்த அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இதையடுத்து மாநாடு படத்தின் தாமதத்தால் ஏற்கனவே அசோக் செல்வனை வைத்து அவர் மன்மத லீலை என்ற படத்தை இயக்கி முடித்துவிட்டார். இந்த படம் விரைவில் ஓடிடியில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் மாநாடு வெற்றிக்குப் பிறகு பல மொழிகளில் கவனம் பெற்றுள்ள அவர் தன்னுடைய அடுத்த படம் பற்றி பேசியுள்ளார்.
சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் ‘என்னுடைய அடுத்த ஒரு தெலுங்குப் படமாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது’ எனக் கூறியுள்ளார்.