• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் சித்திரை திருவிழாவில் எம்.வி. எம் குழுமம் சார்பாக பக்தர்களுக்கு அன்னதானம்

ByKalamegam Viswanathan

May 5, 2023

மதுரை மாவட்டம் சோழவந்தானில் பிரசித்தி பெற்ற சித்திரைத் திருவிழா நடைபெற்று வருகிறது. வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு எம் வி எம் குழுமம் சார்பில் நீர்மோர் அன்னதானம் வழங்கப்பட்டது. எம் வி எம் குழுமசேர்மன் மணி முத்தையா, நகர அரிமா சங்கத் தலைவர் கலைவாணி பள்ளி தாளாளர் டாக்டர் மருது பாண்டியன், நிர்வாகி வள்ளி மயில் ஆகியோர் பக்தர்களுக்கு வழங்கினர். இதில் சோழவந்தான் மற்றும் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பிரசாதம் வாங்கி சென்றனர்.