
மதுரை அழகப்பன்நகர் முத்துப்பட்டி ஸ்ரீ அஞ்சுபனை மகா முனீஸ்வரர், ஸ்ரீமகா சுடலை கருப்பசுவாமி திருக்கோவில் 13-ம் ஆண்டு வருடாபிஷேக விழா பாலாபிஷேகம், அன்னதானம் நடைபெற்றது.
மதுரை அழகப்பன் நகர் முத்துப்பட்டியில் ஸ்ரீ அஞ்சுபணை மகா முனிஸ்வரர் ஸ்ரீ மகா கடலை கருப்பசுவாமி திருக்கோவிலில் 13 ஆம் ஆண்டு வருடாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. சிவனடியார்கள் மங்கல வாத்தியம் முழங்க பால்குடம் எடுத்து அதிகாலை முதல் மதியம் வரை ஸ்ரீமகாமுனிஸ்வாருக்கு பாலாபிஷேகம் நடை பெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்களும், முத்துப்பட்டி பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு ஸ்ரீமகாமுனிஸ்வரரை தரிசித்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்க்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஸ்ரீஅஞ்சுபணைமகாமுனிஸ்வரர் திருக்கோவில் அறக்கட்டளையினர் சிறப்பாக செய்திருந்தனர்.
