மதுரையில் வேளிர் மக்கள் கட்சியின் முதல் மாநாட்டில் தூத்துக்குடி கடலில் கப்பலோட்டிய தமிழன், வ.உ.சி.சிதம்பரனார் வெண்கலசிலையை அமைக்க வேண்டி கோரிக்கைை வைத்தனர்.
மதுரையில் அண்ணாநகர் பகுதியில் மேலே மக்கள் கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது இந்த மாநாடு வேளிர் மக்கள் கட்சியின் நிறுவனர் முனைவர் பாலசுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது.
பொதுச் செயலாளர் நடராஜன், மாநிலத் துணைத் தலைவர் பாண்டி,
மதுரை மாவட்ட தலைவர் ஜோதிமணி, கழக அமைப்புச் செயலாளர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு அனைத்து பிள்ளைமார் மகா சபை நிறுவனத் தலைவர் ஆறுமுகம் பிள்ளை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து கட்சியின் நிறுவனத்தலைவர் பாலசுப்பிரமணியன் சிறப்புரையில் பேசியது தூத்துக்குடி கடலில் கப்பலோட்டிய தமிழன், வ.உ.சி.சிதம்பரனார் பிள்ளையின் வெண்கல சிலையை நிறுவக்கோரியும், கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க கோரியும் மற்றும் சில கோரிக்கைகளை வலியுறுத்தியும் சிறப்பு உரையாற்றினார்.
இந்த மாநில மாநாட்டில் பல்வேறு சமுதாய அமைப்புகள் தொண்டர்கள் நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.