சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட குளத்துப்பட்டி பிரிவில் பூட்டிய வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக விக்கிரமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பூட்டியிருந்த வீட்டை கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் முன்னிலையில் இரண்டு மரக்கதவுகள் மற்றும் கிரில் இரும்பு கேட்டைஉடைத்து பார்த்தனர். அங்கு கட்டில் மெத்தையில் அழுகிய நிலையில் இழந்திறதி வயது 48 என்பவர் இறந்து கிடந்தார். இவருக்கு கடந்த 2000 ஆண்டு சுகன்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. சில மாதங்களில் கருத்து வேறுபாடு காரணமாக சுகன்யா இளம்பிரிதியை பிரிந்து சென்று விட்டார்.
இந்த நிலையில் இளம்பிரதி அப்பா அய்யரசாமி மற்றும் தாயார் இருவரும் சென்னையில் வேலை பார்த்து வந்துள்ளார்கள். சிறிது காலத்தில் அப்பா இறந்துவிட்ட நிலையில் அம்மா ஓய்வு பெற்று இளம்பிருதியுடன் இருந்து வந்துள்ளார். கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாக இளம்பிரதி அம்மாவும் இறந்து விட்டநிலையில் இளம்பிரதி மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார்.
அந்த நிலையில் இவருடைய உறவினர் இவருக்கு உதவி செய்து வந்ததாக தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து கடந்த ஐந்து நாட்களாக இளம்பிரதி வெளியே வரவில்லை என்றும் பூட்டிய வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து அழுகிய நிலையில் கிடந்த பிணத்தை உடல் கூறு ஆய்வுக்காக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இளம்பிரதி இறந்து கிடந்ததில் இவரா தற்கொலை செய்து கொண்டாரா இல்லை இவருடைய சொத்துக்காக யாரும் திட்டம் போட்டு தற்கொலைக்கு தூண்டி விட்டனரா இல்லை இவருக்கு உறவினர்கள் உணவில் விஷம் கொடுத்தார்களா என்று அங்கு கூடியிருந்த கிராம மக்கள் பேசிக் கொண்டனர். இதுகுறித்து பல கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருமணம் நடந்து பிரிந்து சென்ற சுகன்யா என்பவர் விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததாக போலீசார் தெரிவித்தனர்.