திண்டுக்கல் மாவட்டம் பழனியில், முத்தமிழ் முருகன் மாநாட்டையொட்டி, இன்று காலையில், மயிலும் சேவலுடன் கூடிய முருகப்பெருமான் படம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. முன்னதாக குத்துவிளக்கு ஏற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஐ பெரியசாமி, சேகர் பாபு, ஐ பி செந்தில்குமார் எம்எல்ஏ, சச்சிதானந்தம் எம்பி, ரத்தனகிரி பாலமுருகன் சாமிகள் ஆகியோர் உள்ளனர். மாநாடு தொடங்கியது.




