• Tue. Mar 21st, 2023

பதவியேற்றார் இசைஞானி இளையராஜா!!

Byகாயத்ரி

Jul 25, 2022

மத்திய பாஜக அரசு இளையராஜா உள்பட 4 பேருக்கு ராஜ்யசபா எம்பி பதவி அறிவித்திருந்தது. இதில், இளையராஜா தவிர மற்ற மூவரும் எம்பி பதவியை ஏற்றுக் கொண்டனர் .

அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி ஒன்றுக்காக சென்றிருந்த இளையராஜா சமீபத்தில் இந்தியா திரும்பிய நிலையில் இன்று அவர் பாராளுமன்றத்தில் பதவி ஏற்பார் எனக் கூறப்பட்டது. அதன்படி, இளையராஜா நேற்று டெல்லி சென்றடைந்தார். டெல்லி வந்த இளையராஜாவுக்கு விமான நிலையத்தில் மேளதாளங்களுடன் அவரது ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில், இளையராஜா இன்று எம்பியாக பதவியேற்றுள்ளார். அவருக்கு எல்லோரது தரப்பிலும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *