• Mon. Oct 5th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

மலிவு விலையில் அப்பார்ட்மெண்ட், தங்கம் தருவதாகக் கூறி பல கோடி மோசடி!

BySeenu

Oct 5, 2026

சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா, பழனியாபுரி ராமநாதபுரத்தைச் சேர்ந்த பாஸ்கர் (வயது 39) என்பவரிடம் அப்பார்ட்மெண்ட்டில் குறைந்த விலையில் வீடு வாங்கித் தருவதாக ஜெகநாதன் மற்றும் அவரது கூட்டாளிகள் ஆசைவார்த்தை கூறியுள்ளனர்.

இதனை நம்பிய பாஸ்கர், 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் பல தவணைகளாகவும், ரமேஷ் என்பவரின் வங்கிக் கணக்கு மூலமாகவும் மொத்தம் ரூ.11 லட்சத்து 77 ஆயிரத்து 500 கொடுத்துள்ளார். மேலும், நவீன் என்பவர் ரூ.4½ லட்சத்திற்கான காசோலை வழங்கி மோசடிக்கு உடந்தையாக இருந்துள்ளார். ஆனால், பணம் கொடுத்து சுமார் 9 ஆண்டுகள் கடந்தும் வீடு வாங்கித் தரப்படவில்லை; பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் அலைக்கழித்து வந்துள்ளனர். பணத்தை திருப்பிக் கேட்டபோது பாஸ்கரையும் அவரது குடும்பத்தினரையும் ஜெகநாதன், கண்ணன், ரமேஷ் ஆகியோர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதேபோல், கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்த முகமது ஜாபர் அலியிடம் பூர்வாங்கரா அப்பார்ட்மெண்ட்டில் குறைந்த விலையில் வீடு வாங்கித் தருவதாகக் கூறி ஜெகநாதன் மற்றும் நவீன்குமார் ஆகியோர் பல்வேறு தவணைகளாக ரூ.17 லட்சம் மோசடி செய்துள்ளனர். கோவை இடையார்பாளையத்தைச் சேர்ந்த ராதிகா சேத்தன் என்பவரிடம் ரூ.9 லட்சம் பெற்று ஏமாற்றியுள்ளனர். பணத்தை திருப்பிக் கேட்டபோது தொலைபேசியில் மிரட்டல் விடுத்துள்ளனர்.

மேலும், கோவை இருகூர் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் (42) என்பவரிடம் அப்பார்ட்மெண்ட்டில் வீடு வாங்கித் தருவதாக ரூ.9 லட்சம், அவரது நகைகளைத் தனியார் நிறுவனத்தில் கண்ணன் அய்யாதுரை பெயரில் அடமானம் வைத்து ரூ.3 லட்சத்து 3 ஆயிரத்து 340, அலுவலக கிரெடிட் கார்டு மூலமாக ரூ.3 லட்சத்து 26 ஆயிரத்து 250 என மொத்தம் ரூ.10 லட்சத்து 89 ஆயிரத்து 590 சுருட்டியுள்ளனர். இதுதவிர, சென்னையைச் சேர்ந்த ரகுராமிடம் ரூ.10 லட்சம், பழனிக்குமாரிடம் ரூ.8 லட்சம், கஜா விஜயிடம் ரூ.10 லட்சம், ராதிகா ஜெகனிடம் ரூ.5 லட்சம் எனப் பலரிடமும் கைவரிசை காட்டியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகார்களின் பேரில் கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவின்படி சிங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தினர். ஜெகநாதன் தலைமையிலான இந்த நால்வர் கும்பல் 4 மாவட்டங்களில் 40-க்கும் மேற்பட்டோரிடம் பல கோடி ரூபாய் வரை மோசடி செய்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து சிங்காநல்லூர் போலீசார் ஜெகநாதன் மற்றும் சேலம் மாவட்டம் எடப்பாடி தொண்டம்பட்டியைச் சேர்ந்த கண்ணன் , சிங்காநல்லூர் வேலன் நகரைச் சேர்ந்த நவீன், பல்லடம் லட்சுமி மில் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் ஆகிய 4 பேர் மீது மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.