• Mon. Oct 5th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

குப்பைகளை கொட்டி எரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பார்வட் ப்ளாக் கட்சியினர் போராட்டம்..,

ByP.Thangapandi

Oct 5, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் 24 வார்டு பகுதிகள் உள்ளன.,

இந்த நிலையில் வார்டு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை நகராட்சி நிர்வாகம் உசிலம்பட்டி அருகே உள்ள மின் மயான பகுதியில் குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிடிக்காமல் மலை போல் கொட்டி தீயிட்டு எரிக்கப்பட்டு வருவதால் அப்பகுதியில் உள்ள மக்கள் மற்றும் விவசாய நிலங்கள் சீர்கேடு ஏற்படுவதாகவும் மேலும் பொது மக்களுக்கு தீயிட்டு எரிக்கப்படும் புகையால் மூச்சுத் திணறல் உள்ளிட்ட பல்வேறு நோய் தொற்று ஏற்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.,

மேலும் இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் நகராட்சி அலுவலக முற்றுகை, சாலை மறியல், நகராட்சி மின்மயானத்தை பூட்டு போடும் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்ற சாற்றுகின்றனர்.,

இந்நிலையில் தொடர்ந்து குப்பையில் எரிக்கப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி போத்தம்பட்டி, நல்லுத்தேவன்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பார்வர்ட் பிளாக் கட்சியினர் இணைந்து உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.,

இந்த நிலையில் நகராட்சி ஆணையாளர் சங்கர் கணேஷ்-யை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.,

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீ வைத்து எரிக்கப்படாமல் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையாளர் சங்கர் கணேஷ் மற்றும் நகராட்சி அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.,