• Mon. Oct 5th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

ஏ போர் பெர்டிலிட்டி சென்டர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்த நடிகை ராதிகா சரத்குமார், மற்றும் சின்னத்திரை புகழ் கோபிநாத்..,

BySeenu

Oct 5, 2026

முன்னணி கருத்தரிப்பு சிகிச்சை மையமான ஏ,போர் பெர்டிலிட்டி சென்டர் தனது 25வது புதிய கிளையை கோவை ஹோப்ஸ் பகுதியில் திறந்துள்ளது. கருத்தரிப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் தனி பயனாக்கப்பட்ட சிகிச்சை முறைகளின் உதவிகளுடன் விரிவான கருத்தரிப்பு சிகிச்சையை வழங்கும் நோக்கமாகக் கொண்டுள்ள இந்த மையத்தை திரைப்பட நடிகையும், தயாரிப்பாளருமான ராதிகா சரத்குமார், மற்றும் பிரபல சின்னத்திரை தொகுப்பாளரும், பேச்சாளருமான கோபிநாத் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஏ 4 பெர்டிலிட்டி சென்டர் நிறுவனரும் நிர்வாக இயக்குனருமான டாக்டர் அசோக் குமார், மற்றும் ஏ4 பெர்டிலிட்டி சென்டர் குளோபல் கிளினிக் இயக்குனரும் இணை நிர்வாக இயக்குனருமான டாக்டர் அருணா அசோக் ஆகியோர் இணைந்து கூறியதாவது..

கோவையில் திறக்கப்பட்டுள்ள இந்த ஏ 4, ஃபெர்டிலிட்டி சென்டர், ஒரே கூரையின் கீழ் அனைத்து வகையான கருத்தரிப்பு சிகிச்சைகளையும் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஐவிஎப் மற்றும் ஐயூஐ, மற்றும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான குழந்தை பேறு சிகிச்சை, கருமுட்டை, விந்தணு மற்றும் கரு உறைவிப்பு, கருத்தரிப்புத்திறன் பாதுகாப்பு, மற்றும் மரபணு சோதனை, லேப்ராஸ்கோப்பி, மற்றும் நன்கொடையாளர், மற்றும் கரு நன்கொடை திட்டங்கள், பாலிகுலர் கண்காணிப்பு, ஓவுலேஷன் இன்டக்ஷன் உள்ளிட்ட நவீன சிறப்பு சேவைகளை இந்த மையம் வழங்குகின்றதாக தெரிவித்தனர்.

மேலும் எளிதில் அணுக கூடிய மற்றும் சிறப்பான கருத்திருப்பு சிகிச்சையின் தேவை அறிந்து வரும் நிலையில், இந்த மையம் அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் மற்றும் மேம்பட்ட ஐவிஎஃப் நவீன கருத்தரிப்பு தொழில்நுட்பங்களை, வழங்குகின்றது எனவும், நோயாளிகளின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ள, தனி பயனாக்கப்பட்ட சிகிச்சை திட்டங்களிலும் இந்த மையம் கவனம் செலுத்துவதாக அவர் தெரிவித்தார்.

மிக சிறப்பான சிகிச்சையினை அழிப்பதற்காக நிபுணத்துவம் வாய்ந்த ஐவிஎப் ஆலோசகர்களுடன், இணைந்து ஏ4 ஃபெர்டிலிட்டி சென்டர் செயல்படுகின்றது எனவும் கோவையை தொடர்ந்து விரைவில், பொள்ளாச்சி மற்றும் சேலத்தில் புதிய கிளைகளை தொடங்க ஏ4 பெட்டிலிட்டி சென்டர் திட்டமிட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.