• Sat. May 9th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் – இன்று விசாரணை

Byமதி

Dec 15, 2021

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் தொடர்ந்த அனைத்து வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வரவிருக்கிறது.

இதையொட்டி தமிழக அரசு நேற்று உச்சநீதிமன்றத்தில் பதில் மனுவை தாக்கல் செய்தது. அதில், முல்லைப் பெரியாறு அணையில் இருந்து முன்னறிவிப்பின்றி நீர் திறக்கப்படுகிறது, ஒரு நாள் முழுவதும் 12 ஆயிரம் கன அடி திறக்கப்பட்டது என்ற கேரள அரசின் குற்றச்சாட்டு நியாயமற்றது, உண்மை தன்மையற்றது.

ஏனெனில் 2 மணி நேரம் மட்டுமே 12 ஆயிரம் கன அடி திறக்கப்பட்டது, இதன்பின்னர் நீர் திறப்பு குறைக்கப்பட்டது. கேரள பகுதிகளில் நீர் செல்லும் பாதை பராமரிக்காமல் விட்டதால் நீர் செல்லமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது, எனவே அது கேரள அரசின் குறைபாடு எனக் கூறப்பட்டுள்ளது.

அதேபோன்று நீர் திறப்பால் பல்வேறு பகுதிகள் பாதிப்படைந்ததாக கேரள கூறும் குற்றச்சாட்டு மற்றும் புகைப்படங்களும் உண்மை தன்மை அற்றவை என மனுவில் கூறப்பட்டுள்ளது.