• Fri. Mar 29th, 2024

‘சிறுவர்களின் தற்கொலையை தடுக்க நடவடிக்கை” – மத்திய அரசு தகவல்

Byமதி

Dec 15, 2021

மக்களவையில் பெரம்பலூர் எம்.பி பாரிவேந்தர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் உள்துறை இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா சிறார்களின் தற்கொலையை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் குழந்தைகளின் தற்கொலை அதிகரித்து வருவதாக கூறப்படுவது உண்மையெனில், தற்கொலையைத் தடுக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னவென்றும் மக்களவையில் பாரிவேந்தர் எம்.பி. கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த உள்துறை இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா, குழந்தைகள் உயிரை மாய்த்துக் கொள்வதைத் தடுக்க, குழந்தைகளின் கவலைகளை பகிர்ந்து கொள்ள தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் நாடு முழுவதும் கலந்தாய்வு மையங்களை தொடங்கி நடத்தி வருவதாகவும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமார் 270 ஆலோசகர்கள் இலவசமாக சேவை வழங்கி வருவதாகவும் விளக்கமளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *