• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

முல்லைப்பெரியாறு முற்றுகைப் போராட்டம் விவசாய சங்கம் அறிவிப்பு

மேற்பார்வை குழு மார்ச் 22&ல் பெரியாறு அணையில் ஆய்வு. முதல்நாளில் 14 கோரிக்கையை வலியுறுத்தரி எல்லைப்பகுதியில் விவசாய சங்கம் முற்றுகைப்போராட்டம். விவசாய சங்கம் அறிவிப்பு.

முல்லைப்பெரியாறு அணை பிரச்சனைக்கு தேசிய அளவிலான நிபுனர் குழுவை அமைக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரியகாந்த மற்றும் தீபங்கர்தத்தா ஆகியோர் உதிதரவிட்டதை தொடர்ந்து, மத்திய நீர்வளத்துறை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அனில்ஜெயின் தலைமையில் ஏழுபேர் கொண்ட புதிய மேற்பார்வை குழுவை நியமித்தது. இந்த குழுவில் தமிழகம் சார்பாக, தமிழ்நாடு நீர்வளத்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா, காவிரி தொழில்நுட்ப குழும தலைவர் சுப்ரமணியன், கேரள அரசு சார்பாக கேரள அரசின் கூடுதல் தலைமை செயலர் விஸ்வாஸ், கேரள நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் பிரியேஷ், மத்திய அரசு சார்பாக இந்திய அறிவியல் ஆராய்ச்ச மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் விவேக் திரிபாதி, ராகுல்குமார் சிங், ஆனந்த ராமசாமி ஆகியோர் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி அன்று, பெரியாறு அணை விவகாரத்தில் புதிய மேற்பார்வை குழு, பெரியாறு அணையை ஆய்வு செய்து நான்கு வார காலத்திற்குள் நீதிமன்றத்தில் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இதையடுத்து வரும் மர்ச் 22&ல் இக்குழுவினர் பெரியாறு அணையில் ஆய்வுசெய்ய உள்ளனர். இந்நிலையில், முல்லைப்பெரியாறு அணை பிரச்சனையில் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 21 ஆம் தேதி குமுளி எல்லையில், பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாபெரும் முற்றுகை போராட்டம் நடத்த உள்ளதாக ஒருங்கிணைப்பாளர் அன்வர் பென்னிகுக் பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.

இதுகுறிதத்து அவர் கூறுகையில், வரும் மர்ச் 22&ல் புதிய மேற்பார்வை குழு, பெரியாறு அணையை ஆய்வு செய்ய உள்ளது, அதற்கு முதல்நாளில் (1). 2006 மற்றும் 2014 ஆகிய இரண்டு ஆண்டுகளில் உச்ச நீதிமன்றம் முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கொடுத்த தீர்ப்புகள் ஏன் இதுவரை அமல்படுத்தப் படவில்லை என்பது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். (2) 1979 ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணை மீது போடப்பட்ட மறு ஒப்பந்தத்தின் நகல்களை பொது வெளியில் பார்வைக்கு வைக்க வேண்டும். (3)-ஒப்பந்தப் பகுதியில் வரும் 8,400 ஏக்கரில் கேரள மாநில அரசு செய்திருக்கும் முழுமையான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். (4)-முற்றிலும் நீர் தேங்கும் பகுதியில் வரும் ஆனவச்சால் பகுதியில், கேரள மாநில வனத்துறையால் அமைக்கப்பட்டிருக்கும்.

மெகா கார் பார்க்கிங் கை, மறு அளவீடு செய்வதற்கு சர்வே ஆஃப் இந்தியாவை தவிர்த்து, இந்தியாவில் உள்ள முன்னணி சர்வே முகமைக்கு அளவீடு செய்ய உத்தரவிட வேண்டும். (5)-130 அடிக்கு மேல் தேக்கடியில் இருந்து அணை வரை கர்னல் பென்னிகுவிக்க அவர்களால் போடப்பட்ட மண் சாலையை, தார்ச் சாலையாக மேம்படுத்தி, தமிழக அதிகாரிகள் தளவாடப் பொருட்களை அணைக்கு கொண்டு செல்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். (6)-எந்தவித எழுத்து பூர்வமான ஒப்புதலும் இல்லாமல், அணைக்குள் அத்துமீறி ஆக்கிரமித்திருக்கும் கேரள மாநில காவல்துறையை உடனடியாக வெளியேற்றி உத்தரவிட வேண்டும். (7) 11 ஆண்டுகளாக அணைக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் தமி£க பொதுப்பணித்துறையின் தமிழன்னை படகை இயக்குவதற்கு உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும். (8)-கேரள மாநில நீர்ப்பாசனத்துறை அதிகாரிகளுக்கு, அணைக்குள் அதிகாரமற்ற பூஜ்ஜிய நிலையை உருவாக்கி, அணையை விட்டு அவர்களை வெளியேற்றி உத்தரவிட வேண்டும். (9)-பேபி அணைக்குச் செல்லும் வழியில் உள்ள பட்டுப்போன எட்டு மரங்களை அப்புறப்படுத்துவதற்கும், 15 மரங்களை வெட்டுவதற்கும் உடனடியாக உத்தரவிட்டு பேபி அணை பலப்படுத்தப்பட வேண்டும்.

10)-கேரள மாநில சுற்றுலா துறையின் 8 படகுகளும் அணைக்குள் செல்வதற்கு உரிய கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். (11)-ஏற்கனவே அணைக்குள் இயங்கிக் கொண்டிருந்த தமிழ்நாடு மின்சார வாரியத்தின் படகை, மீண்டும் அணைக்குள் இயக்கப்படுவதற்கு உத்திரவாதம் அளிக்கப்பட வேண்டும். (12)-மழைமானி அமைந்திருக்கும் முல்லைக்கொடிக்கு செல்வதற்கு பெரியார் புலிகள் காப்பகம் விதித்திருக்கும் தடையை நீக்கி, தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் மழை மானியை அளவீடு செய்ய உத்தரவிட வேண்டும். (13)-தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் அணைக்குள் விடப்பட்டிருக்கும் படகுகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட்டு, அவை தமிழக அரசின் ஒப்புதலோடு இயங்குவதற்கு வழிவகை செய்ய வேண்டும். (14)-மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர்களை முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்காக பணியில் அமர்த்துவதற்கு பிரதான குழு உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட 14 கோரிக்கைகளை வைத்து எல்லையில் போராட்டம் நடத்த உள்ளோம் என்றார்.