• Sun. Feb 9th, 2025

ஐராவதேஸ்வரர் கோவிலின் முகூர்த்த கால் நடும் விழா

ByP.Thangapandi

Jan 26, 2025

உசிலம்பட்டி அருகே ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த மீனாட்சியம்மன் சமேத ஐராவதேஸ்வரர் கோவிலின் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, முகூர்த்த கால் நடும் விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆனையூரில் அமைந்துள்ளது ஆயிரம் ஆண்டுக்கும் முந்தைய பழமை வாய்ந்த மீனாட்சியம்மன் சமேத ஐராவதேஸ்வரர் திருக்கோவில்.

இக் கோவிலில் புரணமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுமார் 15 ஆண்டுகளுக்கு பின் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.

இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று சுப முகூர்த்த கால் நடும் விழாவை சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜை செய்து நடத்தி வைத்தனர்.

இந்நிகழ்வில் உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் மற்றும் ஆனையூர், கட்டகருப்பன்பட்டி, பொட்டுலுபட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு முகூர்த்த கால் நட்டு வைத்து சாமி தரிசனம் செய்தனர்.