• Sat. Jun 10th, 2023

இறுதிப் போட்டியில் விளையாடுவதில் எம்.எஸ்.தோனிக்கு சிக்கல்

ByA.Tamilselvan

May 25, 2023

அம்பயர்கள் டோனி மீது குற்றம் சாட்டினால் அவர் இறுதி போட்டியில் விளையாடாமல் போவதற்கு அதிகம் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இம்பக்ட் வீரராக வேகப்பந்து வீச்சாளர் பதிரானா பந்து வீச வந்த பொழுது அவர் மைதானத்தை விட்டு வெளியேறி 9 நிமிடங்கள் கழித்து மீண்டும் வந்ததால் நடுவர் தடுத்து நிறுத்தினார். இப்போது தான் அவர் களத்திற்கு வந்திருக்கிறார். எனவே உடனடியாக அவரை பந்து வீச அனுமதிக்க முடியாது என்று நடுவர் கூறினார். இதனால் அதிருப்திக்குள்ளான டோனி மற்றும் சக வீரர்கள் நடுவரிடம் சில நிமிடங்கள் வாதிட்டனர். இந்த விவாதம் முடிவதற்கே 8 நிமிடங்களுக்கு மேல் ஆகிவிட்டதால் பதிரனா பந்துவீச அனுமதிக்கப்பட்டார். ஒரு வீரர் மைதானத்திற்கு வெளியே எவ்வளவு நேரம் இருக்கிறாரோ அதே நேரம் மைதானத்திற்கு உள்ளும் இருக்க வேண்டும் என்பது விதிமுறைகள் உள்ளன இதை தோனி சாதுர்தியமாக பயன்படுத்தி உள்ளார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அம்பயர்கள் டோனி மீது குற்றம் சாட்டினால் அவர் இறுதி போட்டியில் விளையாடாமல் போவதற்கு அதிகம் வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *