• Tue. Nov 11th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

மோட்டார் ஸ்போர்ட்ஸ் போட்டி துவக்கம்..,

BySeenu

Oct 12, 2025

திரு. கே.டி. ராமா ராவ், முன்னாள் அமைச்சர் – தெலங்கானா துவக்கி வைத்தார்

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 70க்கும் மேற்பட்ட மாணவர் குழுக்கள் மற்றும் 1300க்கும் மேற்பட்ட இளம் பொறியாளர்கள் தங்கள் வாகன வடிவமைப்பு திறன்களை தொழில் நிபுணர்கள் குழுவின் முன்னிலையில் வெளிப்படுத்தினர்

தெலுங்கானாவின் முன்னாள் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மற்றும் தற்போதைய பாரத் ராஷ்டிர சமிதி (BRS) கட்சியின் செயல் தலைவர் கே.டி. ராமராவ், கோயம்புத்தூரில் நடைபெறும் தேசிய மாணவர் மோட்டார்ஸ்போர்ட் போட்டியின் 10வது பதிப்பைத் தொடங்கி வைத்தார்.

இந்தப் போட்டியானது ஹைதராபாத்தைச் சேர்ந்த Fraternity of Mechanical and Automotive Engineers எனும் அமைப்பும், கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களும் இணைந்து நடத்துகின்றன. இந்த போட்டியில் நாடு முழுவதிலும் உள்ள 13 மாநிலங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 1000-க்கும் அதிகமான பொறியியல் மாணவர்கள் கலந்துகொள்கின்றனர்.

போட்டியில் பங்கேற்கும் அணிகள், தங்கள் சொந்த கார்ட் ரக கார்கள் மற்றும் பைக்குகளை உருவாக்க வேண்டும்.

அவ்வாறு உருவாக்கப்படும் வாகனங்கள் அக்டோபர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நிபுணர்களால் மதிப்பீடு செய்யப்படும்

இதனைத் தொடர்ந்து, அக்டோபர் 13 முதல் 15 வரை கோயம்புத்தூர் செட்டிப்பாளையத்தில் உள்ள காரி மோட்டார் ரேஸ் ட்ராக்கில் முக்கியப் போட்டி நடைபெறும்.

இதன் துவக்க நிகழ்வு கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் அதன் தலைவர் சங்கர் வானவராயர் முன்பு நடைபெற்றது.