மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா மேலையூரில் மதர் லேன்ட் சாரிட்டபிள் டிரஸ்ட் பெயர் பலகை விழா நடைபெற்றது.. விழாவிற்கு டிரஸ்டின் நிறுவனர் ஈழவளவன் தலைமை வகித்தார்.

பொதுமக்களின் பங்களிப்புடன் ஒரு லட்சம் சதுர அடி இந்த டிரஸ்ட் கட்டுமான பணிக்காக இடம் வாங்கப்பட்டுள்ளது. இந்த டிரஸ்டின் மூலம், ஏழை மக்களுக்கும், விளிம்புநிலையில் வாழும் மாணவ – மாணவிகளுக்கும் இலவச அரசு தேர்வு பயிற்சிகள், தட்டச்சு . கம்யூட்டர் போன்ற பயிற்சிகள் அரசு பணிகளுக்கு செல்ல உதவி செய்வதற்கும், ஏழை விவசாய குடும்பத்தினருக்கும் உதவவும் இந்த மதர்லேண்ட் சாரிட்ட புல் டிரஸ்ட் உருவாக்கபட்டுள்ளது.
இந்த அறக்கட்டளை பெயர் பலகை திறப்பு விழாவுக்கு மேலையூர் பஞ்சாயத்துகாரர்களும், மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசியல் பிரமுகர்களும், மற்றும் ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டனர். இறுதியில் அறக்கட்டளை பொருளாலர் பாரதி மோகன் நன்றி தெரிவித்தார்.