• Sun. Aug 30th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

கூலித்தொழிலாளி சரமாரி குத்தி கொலை தாய் மகன் கைது ;

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் கூலி தொழிலாளி .இவரது தாய் கடந்த 23ஆம் தேதி குலசேகரத்தில் நடைபெற்ற தடுப்பு முகாமில் தடுப்பூசி செலுத்தியபோது உயிரிழந்தார் .இதனால் தனது தாய் உயிரிழந்ததை கேட்டு வெளிநாட்டில் இருக்கும் மூத்த மகன் ராஜன் தமிழ்த்தாயை யாரும் கவனிக்காத காரணத்தால் உயிரிழந்ததாக தனது தம்பி சுரேஷ் இடம் கூறியுள்ளதாக தெரியவந்தது.

இதில் சுரேஷ் வீட்டாருக்கும் ராஜன் வீட்டாருக்கும் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் நேற்று இரவு சுரேஷ் ராஜன் வீட்டிற்குச் சென்றுள்ளார் அப்போது ராஜனின் மனைவி விஜிலா மற்றும் அவரது மகன் அல்டின் ரிஜாஸ் சுரேசை தாக்கி வீட்டில் இருந்த வெந்நீரை எடுத்து சுரேஷ் மீது விஜிலா ஊற்றியுள்ளார். மேலும் ஆத்திரம் அடைந்த அவரது மகன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சுரேஷ்சை குத்தியுள்ளார் .

இதில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் குத்தியதால் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் அவருக்கு இரண்டு மணி நேரம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து டி.எஸ்.பி தாய் மற்றும் மகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார் இந்த சம்பவம் குலசேகரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது