• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பெற்ற மகனை மாடியில் கட்டிதொங்க விட்ட தாய்!

உயரமான கட்டிடங்களின் பால்கனியில் குழந்தைகள் சிக்கிக்கொள்வதையும், அவர்களை மீட்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடக்கும். அவைத் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி ஹிட் அடிக்கும். ஆனால், அதற்கும் மேலாக பத்தாவது மாடியில் தனது மகனை தாய் கட்டி தொங்கவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானாவின் ஃபரிதாபாத் ஹைரைஸில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில், 10ஆவது மாடியின் பால்கனியில் ஒரு தாய் தனது மகனை சேலையில் கட்டி அந்தரத்தில் தொங்கவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அருகில் இருந்த சிலர் வேடிக்கை பார்த்தனர்.

அதேநேரத்தில் தாயின் செயலை எதிர் மாடியில் இருந்தவர்கள் வீடியோ எடுத்து வெளியிட்டனர். இதனால் அந்த வீடியோ செம வைரலானது. தாயின் இரக்கமற்ற குணத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். அந்த வீடியோவில், பெட்ஷீட்டில் சிறுவன் அந்தரத்தில் தொங்கியபடி உள்ளார். பத்தாவது மாடியில் பெட்ஷீட்டை தாய் பிடித்தப்படி இருக்க, அதில் பிடித்து தொங்கியவாறு சிறுவன் கீழே இறங்குகிறார்.

ஒன்பதாவது மாடியில் பூட்டிய வீட்டின் பால்கனியில் விழுந்த புடவையை எடுக்க தாய், மகனை கீழே இறக்கியது அதன்பின்னர் தான் தெரியவந்தது. பின்னர் அவரும் மற்ற குடும்ப உறுப்பினர்களும் இழுக்கும்போது மகன் பெட்ஷீட்டில் ஏறுவதை இந்த வீடியோ மேலும் காட்டுகிறது.

கடந்த வாரம் ஃபரிதாபாத்தில் உள்ள செக்டார் 82 இல் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டடத்தில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. தனது மகனின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் முயற்சியாகவே இதனை பார்ப்பதாக பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுக்கின்றனர்.