• Sat. Apr 26th, 2025

தாயில்பட்டி பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட கோவேறு கழுதைகள்…

ByK Kaliraj

Mar 21, 2025

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த மேல தாயில்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. தாயில்பட்டி பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட கோவேறு கழுதைகள் உள்ளன. அவ்வப்போது அரசு மேல்நிலைப்பள்ளி முன்பு வாசலில் நீண்ட நேரம் நிற்கிறது. அப்போது பள்ளிக்குள் செல்லவும் பள்ளி நேரம் முடிந்து வெளியில் செல்லவும் மாணவ ,மாணவிகளை செல்ல விடாமல் கோவேறுக்கழுதைகள் பயமுறுத்தி வருகிறது.

சில சமயங்களில் பள்ளியின் மைதானத்திலும் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொள்கிறது. இதனால் அச்சத்துடன் சென்று வருகின்றனர் . ஆகையால் சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் கோவேறுக்கழுதைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ, மாணவிகள், கோரிக்கை விடுத்துள்ளனர்.