• Mon. Mar 23rd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

நாட்டில் 50 சதவீதத்துக்கு மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தியது மகிழ்ச்சி – பிரதமர் மோடி

Byமதி

Dec 7, 2021

மத்திய சுகாதாரத் துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தனது டுவிட்டர் பக்கத்தில், இந்தியாவில் தகுதியான மக்களில் 50 சதவீதத்துக்கும் கூடுதலானோர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இது மிகவும் பெருமைக்குரிய தருணம். கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் ஒன்றாக வெல்வோம்’ என பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடி இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், இந்தியாவின் தடுப்பூசி பணி மற்றொரு முக்கியமான மைல்கல்லை கடந்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான போரை வலுப்படுத்த இந்த உத்வேகத்தை தொடர்ந்து கடைபிடிப்பது மிகவும் முக்கியம். முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளை பின்பற்றுங்கள் என  கூறியுள்ளார்.