உசிலம்பட்டி அருகே மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலால் சுமார் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கர் பாதிப்படைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடப்பட்டி ஒன்றியத்தில் உள்ள பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் டி.இராமநாதபுரம், மேலத்திருமாணிக்கம், சங்கரலிங்காபுரம், பாப்பநாயக்கன்பட்டி, காமாட்சிபுரம், உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் மக்காச்சோளம் சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மக்காச்சோள பயிர்கள் அடைப்புழுத்தாக்குதால் பாதிப்படைந்துள்ளன.
இந்நிலையில் மக்காச்சோளம் நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ள சூழ்நிலையில் படை குழுக்கள் தாக்கி சேதம் அடைந்துள்ளது.
மேலும் மக்காச்சோளம் விளைச்சல் இன்றி அதிக பாதிப்படைந்துள்ளது இதனால் ஏக்கருக்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை செலவு செய்து மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து சேடப்பட்டி யூனியன் அலுவலகத்திலும் வேளாண் துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவிக்கும் இதுவரையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மேலும் பாதிக்கப்பட்ட மக்காச்சோளராக பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்யவில்லை என்றும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மாவட்ட நிர்வாகம் படைப்புழுக்களால் பாதிக்கப்பட்ட மக்காச்சோளம் பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்.