• Fri. Jan 17th, 2025

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மின்கம்பம்

ByP.Thangapandi

Jan 2, 2025

உசிலம்பட்டி அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் முறையில் உள்ள மின்கம்பம் உள்ளது. புதிய மின்கம்பம் அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேக்கிழார்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மாருதி நகரில் சிமெண்ட் மின் கம்பம் சிமெண்ட் வெடித்து சிதம்படைந்து கம்பிகள் துருப்பிடித்து வெளியே தெரிந்தவாறு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளது.

இதுகுறித்து உசிலம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

மேலும் சிதலமடைந்த சிமெண்ட் மின் கம்பத்தால் உயிர் சேதம் ஏற்படும் முன் அகற்றி புதிய மின்கம்பம் அமைத்த தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.