ஹாக்கி விளையாட்டில் தனிமுத்திரை பதித்து, ஹாக்கி விளையாட்டு போட்டியின்மூலம் இந்தியாவை உலகநாடுகள் உற்றுநோக்கும்வகையில் பல்வேறு பதக்கங்களைப் பெற்றுத்தந்த தயான்சந்த் அவர்களின் பிறந்தநாளை தேசிய விளையாட்டு தினமாக இன்று கடைபிடிக்கப்படுகிறது.
தேசிய விளையாட்டு தினமாக இன்று மாணவர்கள் இளம்வயது முதல் ஏதேனும் ஒருவிளையாட்டில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும் .
மேலும் விளையாட்டு மூலம் உடலுக்கும், மனதுக்கும் புத்துயிர் ஏற்படுவதுடன் விளையாட்டுதுறையில் சாதிப்பதன் மூலம் உலகஅரங்கில் விளையாட்டு வீரருக்கும், இந்தியாவிற்கும் பெருமையினை தேடித்தரும் விதமாக மாணவர்கள், இளம்சமுதாயத்தினர் மற்றும் பெற்றோர்களிடையே ஏற்படுத்தும்நோக்கில் நீதிமன்ற சாலையில் தேசிய கல்லூரி விளையாட்டுத்துறை மற்றும் நாட்டுநலப்பணித் திட்டத்தில் மாணவ, மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வு மனிதசங்கிலியில் ஈடுபட்டனர்.
இந்த விழிப்புணர்வு மனிதசங்கிலியினை மாநகர காவல் உதவி ஆணையர் அஜய்தங்கம் துவக்கிவைத்து மாணவர்கள் விளையாட்டுதுறையில் சாதிக்கவேண்டும் என வாழ்த்தினார். இதில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் விளையாட்டு துறையில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள், சாதனை வீரர்கள் குறித்து விழிப்புணர்வு மனிதசங்கிலியில் பங்கேற்றனர்.
மேலும் விளையாடும்போதுதான் தங்களது உடல்நலம் மேம்பாடு அடைகிறது, நடந்துமுடிந்த ஒலிம்பிக்கில் அதிக பதக்கங்கள் பெற்றுள்ளநிலையில், வரும்காலங்களில் அதிக பதக்கங்கள் பெறவேண்டும் எனவும் பெற்றோர்களும் தங்களது குழந்தைகளை விளையாட்டில் சேர்த்து அவர்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கவேண்டும் என்றும் தெரிவித்துக்கொண்டார்.