• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு 100க்கும் மேற்பட்டோர் ரத்த தானம்..,

ByM.Bala murugan

Nov 26, 2023

சோழவந்தானில் தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாமில் 100க்கும் மேற்பட்டோர் ரத்தம் வழங்கினர்.

மதுரைமாவட்டம்சோழவந்தானில் தமிழ் தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக ரத்ததான முகாம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது சோழவந்தான் நாடார் உறவின்முறை மகளிர் சமுதாயக் கூடத்தில் முகாம் நடந்தது முகாமில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை ரத்த சேமிப்பு வங்கி மருத்துவ குழுவினரிடம் நாம் தமிழர் கட்சி மற்றும் பொதுமக்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் ரத்தம் வழங்கினார்கள் இதைத் தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இதில் சோழவந்தான் தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.