• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நகர் மன்ற உறுப்பினர்களின் மாதாந்திர கூட்டம்..,

ByP.Thangapandi

Jul 1, 2025

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நகர் மன்ற உறுப்பினர்களின் மாதாந்திர கூட்டம், ஆணையாளர் இளவரசன், நகர் மன்ற துணை தலைவர் தேன்மொழி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் கலந்து கொண்ட நிலையில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் வார்டு பகுதியில் சாக்கடை வசதி, தெரு விளக்கு உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்து தருவதில்லை என திமுக நகர் மன்ற உறுப்பினர்களே கடும் வாக்குவாததில் ஈடுபட்டனர்.

மேலும் உசிலம்பட்டி புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க கோரியும், கூடுதலாக 1 ஏக்கர் கையகப்படுத்துவது தொடர்பான வழக்கில் அரசு வழக்கறிஞர் எந்த முயற்சியும் எடுத்தாக தெரியவில்லை, நகராட்சியின் பணம் விரையமாகிறது என அனைத்து நகர் மன்ற உறுப்பினர்களும் கண்டனங்களை தெரிவித்தனர்.

மேலும் டெண்டர்களை ஒரே ஒரு நபருக்கு மட்டுமே கொடுத்து வருவதால் நகராட்சி பகுதியில் பணிகள் தடை படுவதாகவும், ஒப்பந்தங்கள் வழங்குவதில் அனைத்து நகர் மன்ற உறுப்பினர்களின் ஒப்புதலோடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.