• Thu. Apr 2nd, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

மோகன் மீண்டும் கதாநாயகனாக நடிக்க வருகிறார்

புத்தாண்டு தினத்தில் உங்கள் கொண்டாட்டத்துடன் எட்டுத்திக்கும் நடு நடுங்க கட்டளை வேண்டி காத்திருக்கிறேன் என்கிற அறிவிப்போடு மோகன் தனது படத்தின் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்.


தமிழ் சினிமாவில்1980-90களில் தமிழகம் முழுவதும் பட்டிதொட்டிகளில் மோகன் நடித்த படங்களின் பாடல்கள்தான் ஒலித்தது இவர் நடித்த படங்களின் தொடர் வெற்றியை வேறு எந்த தமிழ் சினிமா கதாநாயகர்களும் இன்றுவரை முறியடித்தது இல்லைஇவர் நடித்த நெஞ்சத்தை கிள்ளாதே, பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை உள்ளிட்ட சில படங்கள் வருடக்கணக்கில் ஓடின. ஆனால் வேகமாக வளர்ந்து கொண்டிருந்த மோகன் ரஜினிகாந்த், கமலஹாசன் வளர்ச்சிக்கு முன் இவரால் தாக்குப் பிடிக்க முடியவில்லை தயாரிப்பாளர்கள், பார்வையாளர்கள் கவனம் முழுவதும் ரஜினி – கமல் நோக்கி இருந்தது ஒருக்கட்டத்தில் சினிமாவை விட்டு ஒதுங்கினார்.

அன்புள்ள காதலுக்கு என்று ஒரு படத்தை இயக்கி, நடித்தார் . அந்த படமும் தோல்வி அடைந்து விட்டது. இந்நிலையில் 2008ஆம் ஆண்டு சுட்டபழம் என்ற படத்தில் நடித்தார். தற்போது மீண்டும் தமிழில் ஹீரோவாக ஒரு படத்தில் மறுபிரவேசம் செய்ய முயற்சி செய்கிறார் மோகன். சில்வர் ஜூப்ளி ஸ்டார் என தலைப்புவைக்கப்பட்டுள்ள அந்த படத்தை தாதா 87, பவுடர் போன்ற படங்களை இயக்கிய விஜயஸ்ரீ இயக்குகிறார் .