• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மோடி பிறந்த நாள் … தடபுடல் கொண்டாட்டம்

By

Sep 15, 2021 ,

நாளை மறுநாள் பிரதமர் நரேந்திர மோடியின் 71 வது பிறந்தநாளை மூன்று வாரங்களுக்கு தொடர் கொண்டாட்டங்களை நடத்த பாரதிய ஜனதா கட்சியினர் திட்டமிட்டு உள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் 71வது பிறந்த நாள் செப்டம்பர் 17ஆம் தேதிஆகும். ஒவ்வொரு வருடமும் இந்த தினத்தை சேவை தினமாக கடந்த 2014ஆம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற அதிலிருந்து பாரதிய ஜனதா கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.வழக்கமாக ஒருவாரம் இந்த கொண்டாட்டங்கள் நடத்தப்படும் நிலையில் அவர் தேர்தல் அரசியலுக்கு வந்து இருபது ஆண்டுகள் நிறைவடைவதை அடுத்து இந்த முறை 20 நாட்களுக்கு கொண்டாட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளனர். ரத்ததான முகாம்களை நடத்துவது அன்னதான நிகழ்ச்சிகள் நடத்துவது கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்துவது என பல்வேறு விஷயங்களை மேற்கொள்ள அக்கட்சியினர் தயாராகி வருகின்றனர்.

இவை தவிர இருபத்தி ஏழாயிரம் பூத்துகளில் நன்றி மோடி ஜி என அச்சிட்ட ரேஷன் பொருட்கள் அடஙகிய 14 கோடி பைகள் வழஙகுவது, பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் 5 கோடி தபால் அட்டைகளை அனுப்புவது தெருக்களை சுத்தப்படுத்துவது சாக்கடைகளை தூய்மைப்படுத்துவது போன்ற பல திட்டங்களையும் மேற்கொள்ள உள்ளனர். இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜேபி நட்டா கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு விரிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.