சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் டான். இப்படத்தை லைக்கா நிறுவனமும், சிவகார்த்திகேயனும் இணைந்து தயாரித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடிக்கிறார். மேலும் சமுத்திரகனி, எஸ் ஜே சூர்யா, சூரி, பால சரவணன், காளி வெங்கட் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படம் மார்ச் 25 தேதி வெளியாகும் என அறிவிப்பட்டது.
இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக லைக்கா ப்ரொடக்க்ஷன்ஸ் அறிவித்துள்ளது. இது குறித்து லைக்கா வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்திய திரை உலகின் தன்னிகரில்லா இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில், உச்ச நட்சத்திரங்களான Jr. NTR மற்றும் ராம் சரண் நடிப்பில், மார்ச் 25ஆம் தேதி “RRR” என்னும் பிரம்மாண்ட திரைப்படம், உலக அளவில் வெளிவர இருக்கிறது. இதற்கிடையே, லைக்கா ப்ரொடக்க்ஷன்ஸ் மற்றும் எஸ்.கே. ப்ரொடக்க்ஷன்ஸ் இணைந்து தயாரித்து, நட்சத்திர நடிகர் திரு. சிவகார்த்திகேயன் நடிப்பில், “டான்” திரைப்படம் அதே மார்ச் 25 ஆம் தேதி வெளிவருவதாக முன்னரே
அறிவிக்கப்பட்டிருந்தது.
பெரும் பொருட் செலவில் உருவாக்கப்பட்டுள்ள “RRR” திரைப்படம் வெளியாவதை கருத்தில் கொண்டு, தனது “டான்” ரிலீசுக்கான தேதியை மாற்றுவதற்கு ஒப்புக் கொண்டார் சிவகார்த்திகேயன்ம் இவ்விரு படங்களையும் கண்டு களித்து கொண்டாடப் போகும் உங்களுக்கும் எங்களின் பெரும் மகிழ்ச்சியையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். ‘டான்’ வருகின்ற மே 13 முதல் உலகமெங்கும் வெளியாகிறது என லைக்கா ப்ரொடக்க்ஷன்ஸ் அறிவித்துள்ளது.


