• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நவீன வகை முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை

BySeenu

Jan 1, 2025

கோவை காந்திபுரம் பிரீத்தி மருத்துவமனையில் இரண்டு கால்கள் வளைந்த நிலையில் இருந்தவருக்கு நவீன வகை முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்தது.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பிரீத்தி மருத்துவமனையில் கால்கள் வளைந்து இருந்த 50 வயதானவர் குறைந்த கட்டணத்தில் நவீன மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார்.

கோவை காந்திபுரம் ஒண்பதாவது எக்ஸ்டென்சன் வீதியில் செயல்பட்டு வரும் பிரீத்தி மருத்துவமனையில் அனைத்து விதமான நோய்களுக்கும் தரமான குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வேலூர் நத்தமேடு பகுதியை சேர்ந்தவ 50 வயதான வெங்கடேஷ் என்பவர் கடந்த இரண்டு வருடங்களாக மூட்டு வலியால் அவதிப்பட்டு இருந்துள்ளார்.

இந்நிலையில் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பிரீத்தி மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை மேற்கொண்ட இவர், மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணருமான மருத்துவர் தண்டபாணியிடம் ஆலோனை மேற்கொண்டார்.

இவரது கால்களை பரிசோதித்த மருத்துவர் தண்டபாணி இவரது கால்கள் வளைந்த நிலையில் விநோதமாக இருப்பதை கண்டறிந்தார். இதனை தொடர்ந்து வெங்கடேஷிற்கு முதல் கட்டமாக நவீன வகை சிகிச்சையான மூட்டு மாற்று அறுவை சிகிச்சை ஒரு காலில் மேற்கொள்ளப்பட்டது.

குறைந்த நேரத்தில் செய்யப்பட்ட இந்த அறுவை சிகிச்சையால் வளைந்த கால்களால் பாதிக்கப்பட்டு வந்த வெங்கடேஷ் உடனடியாக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார்.

இதனை கண்ட வெங்கடேஷின் குடும்பத்தினர் மருத்துவருக்கு நன்றி கூறினர். இது குறித்து மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் தண்டபாணி கூறுகையில், தற்போது சிறு வயதினரும் இந்த நோயால் பாதிக்கபடுவதாகவும்,வளரந்து வரும் நவீன மருத்துவத்தில் இது போன்ற நோய்களுக்கு விரைவாக சிகிச்சை அளிக்கும் வகையில் நவீன சிகிச்சைகள் வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இது குறித்த விழிப்புணர்வு தற்போது அதிகரித்து வருவதாக கூறிய அவர், குறிப்பாக சேதமடைந்த குருத்தெலும்பு மற்றும் எலும்பு பாதித்தவரின் மூட்டில் இருந்து அகற்றப்பட்டு, உலோகம், பிளாஸ்டிக் அல்லது பீங்கான் ஆகியவற்றால் செய்யப்பட்ட செயற்கை உறுப்புகளால் மாற்றப்படுகிறது.

இந்த அறுவை சிகிச்சையால் நோயாளிகள் விரைவாக எழுந்து நடக்கும் நிலைக்கு திரும்ப முடியும் என அவர் கூறினார். இது போன்ற சிகிச்சைகளை வயது முதிர்ந்தவர்களும் மருத்துவர்களின் தகுந்த ஆலோசனை செய்து அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என தெரிவித்தார்.