• Fri. Jan 24th, 2025

சாலையை கடந்து சென்ற ஐந்து அடி நீள மலைப்பாம்பு

BySeenu

Jan 2, 2025

கணுவாய் அருகே சாலையை கடந்து சென்ற ஐந்து அடி நீள மலைப்பாம்பு – வைரல் வீடியோ.

கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தடாகம், மாங்கரை, பன்னிமடை கணுவாய், சோமையனூர் உள்ளிட்ட பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு கணுவாய் அடுத்த நர்சரி பகுதியில் சுமார் ஐந்து அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று மெதுவாக சாலையை கடந்து சென்றுள்ளது. இதனைப் பார்த்த வாகன ஓட்டிகள் மலைப்பாம்பை அவர்களது செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளனர் தற்பொழுது அந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.