ஷாஜகானின்தனது காதல் மனைவி மும்தாஜ்க்காக தாஜ்மஹாலைக் கட்டினர். ஆனால் மத்திய பிரதேசத்தில் வசிக்கும் ஆனந்த் சோக்சே தாஜ்மஹால் போலவே ஒரு வீட்டை தன் மனைவிக்காக கட்டியுள்ளது தற்போது வைரலாகி உள்ளது. இந்த அழகான வீட்டை கட்டிய ஆனந்த் பிரகாஷ் சோக்சே அதனை தனது மனைவி மஞ்சுஷா சோக்சேவுக்கு பரிசாக அளித்துள்ளார்.

தாஜ் மஹால் போல கட்டப்பட்டுள்ள இந்த வீட்டை கட்டிய ஆனந்த்க்கு தாஜ் மஹாலை காணும்போதெல்லாம் இது ஏன் மத்திய பிரதேசத்தில் இல்லை என்று தோன்றுமாம். அந்த ஆசை தான் இந்த வீட்டை அவரை கட்டவைத்துள்ளது. இந்த முழு வீட்டையும் கட்டி முடிக்க 3 ஆண்டுகள் ஆனதாக குறிப்புட்டுள்ளார்.

இந்நிலையில், வீட்டின் பொறியாளர் பிரவீன் சவுக்சே கூறும்போது, இந்த வீடு 90×90 என்ற அளவில் கட்டப்பட்டுள்ளது. வீட்டின் மேலே அமைந்துள்ள கோபுரம் தாஜ்மஹால் பாணியில் 29 அடி உள்ளது. இதன் தளம் ராஜஸ்தானில் உள்ள மக்ரானில் உருவாக்கப்பட்டது. மேலும் வீட்டு பர்னிச்சர் பொருட்கள் மும்பை கலைஞர்களால் தயாரிக்க பட்டுள்ளன. வீட்டின் முதல் தளத்தில் 2 படுக்கையறைகள் மற்றும் இரண்டாவது மாடியில் மேலும் 2 படுக்கையறைகள் உள்ளன. அரங்குகள், நூலகம் மற்றும் தியான அறையும் உள்ளேயே உள்ளன. அதுமட்டுமின்றி, வீட்டின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் உண்மையான தாஜ்மஹாலைப் போலவே இருளில் ஒளிரும் வகையில் ஒளிரும் படி செய்துள்ளனர்.
