பெட்ரோல் டீசல் விலையை குறைக்க தவறிய ஆளும் திமுக அரசை கண்டித்து மதுரையில் பாஜக இளைஞரணி மற்றும் மகளிர் அணி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெட்ரோல் டீசல் காண கலால் வரியை குறைக்கக்கோரி இன்று தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் புறநகர் மாவட்ட செயலாளர் சுசீந்திரன் மற்றும் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிறுவனர் திருமாறன் ஜி மற்றும் 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் மகளிர் அணி கலந்துகொண்டு திமுக அரசை எதிர்த்து பல்வேறு கோஷங்களை எழுப்பியது. மதுரை மாநகராட்சி அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அடுத்த கட்ட போராட்டமாக தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலர்களை பிரதமர் நரேந்திர மோடி படத்தை வைக்க வேண்டும், அதேபோல் தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகள் பிரதமர் மோடி படம் வைக்கப்பட வேண்டும், இல்லாவிட்டால் போராட்டம் தொடரும் என்று அறிவித்தனர்.