• Fri. Apr 19th, 2024

கோவையில் நடமாடும் உணவு பகுப்பாய்வகம்..!

Byவிஷா

Feb 2, 2023

சாலையோர கடைகளில் உணவின் தரத்தை பரிசோதிக்க கோவையில் நடமாடும் உணவு ஆய்வக வாகனங்களை கலெக்டர் சமீரன் தொடங்கி வைத்தார்.
கோயம்புத்தூர் சாலையோர கடைகளில் உணவின் தரத்தை பரிசோதிக்க கோவையில் நடமாடும் உணவு ஆய்வக வாகனங்களை கலெக்டர் சமீரன் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் உணவகங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதில் சில உணவகங்களில் தரம் இல்லாத உணவு வழங்கப்படுவதாக புகார்கள் வருகிறது. இதை தடுக்கவும், உணவுகளின் தரத்தை பரிசோதிக்கவும் கோவை மாவட்டத்துக்கு புதிதாக 4 நடமாடும் பகுப்பாய்வு வாகனம் தமிழக அரசால் வழங்கப்பட்டு உள்ளது.
கோவைக்கு புதிதாக வழங்கப்பட்ட நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனங்களை கலெக்டர் சமீரன் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் உணவகங்களின் எண்ணிக்கை அதிக ரித்து வருகிறது. குறிப்பாக சாலையோர கடைகள், துரித உணவகங்கள், தின்பண்ட கடைகள் அதிகமாக நடத்தப்பட்டு வருகிறது. அங்கு வழங்கப்படும் உணவுப் பொருட்கள் தரமாகவும், சுகாதாரமாகவும் உள்ளதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. மேலும் உணவு பொருட்களில் புழு, பூச்சி இருப்பதாகவும், காலா வதியான உணவு பொருட்களை விற்பதாகவும் புகார்கள் வருகிறது. எனவே நடமாடும் உணவு ஆய்வகம் மூலம், அந்த கடைகளில் உணவுகளின் மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்து மதிப்பீடு சான்று வழங்கப்படுகிறது. இது தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *