புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக புதுக்கோட்டை ஒன்றிய பகுதிகளில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான டாக்டர் வை. முத்துராஜா பயணம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது புதுக்கோட்டை பெருங்களூர் சாலை இச்சடி பகுதியில் இருசக்கர மோட்டார் வாகனம் மற்றும் சைக்கிள் மோதிகொண்டதில் முதியவர் ஒருவர் விபத்துக்குள்ளாகி இருப்பதை கவனித்த சட்டமன்ற உறுப்பினர் உடனடியாக தனது வாகனத்தை நிறுத்தி பாதிக்கப்பட்டவருக்கு முதலுதவி அளித்தார்.

மேலும் 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து அவரை பத்திரமாக புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு பணியில் இருந்த மருத்துவரைத் தொடர்பு கொண்டு விரைவாக உரிய சிகிச்சை வழங்குமாறு அறிவுறுத்தினார்.








