• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

அண்ணாமலை முன்னிலையில் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வேட்பு மனுத் தாக்கல்..,

BySeenu

Apr 6, 2026

தேசிய ஜனநாயக கூட்டணியின் கட்சியினர் – மேளதாளங்கள் முழங்க, ஆதரவாளர்கள் புடைசூழ வேட்பு மனு தாக்கல் செய்தார். எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்.கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளரும், தேசிய மகளிர் அணித் தலைவியுமான வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., இன்று தனது வேட்பு மனுவை அதிகாரப் பூர்வமாகத் தாக்கல் செய்தார்.

இந்த நிகழ்வு, பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் பலத்தை வெளிப்படுத்தும் ஒரு பிரம்மாண்ட நிகழ்வாக அமைந்தது. இந்தத் தேர்தலில் பா.ஜ.க-வின் ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் பஜன் லால் சர்மா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். தமிழக பா.ஜ.க வின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை இந்த நிகழ்வில் பங்கேற்றது தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.வேட்புமனுத் தாக்கலுக்கு முன்னதாக, வடவள்ளி லாலி ரோடு அருகே தொடங்கிய இந்த பிரம்மாண்ட ஊர்வலம், வேளாண் பல்கலைக் கழகப் பகுதியைத் தாண்டிக் கோலாகலமாக மேளதாளங்கள் முழங்க, ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு வந்து வானதி சீனிவாசனுக்குத் தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.

பின்னர் தடாகம் சாலையில் அமைந்து உள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் வாணி லட்சுமி ஜெகதாம்பாளிடம் வானதி சீனிவாசன் தனது வேட்பு மனுவைச் சமர்ப்பித்தார்.இந்த நிகழ்வில் அ.தி.மு.க சார்பில் வடவள்ளி சந்திரசேகர் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டு, கூட்டணியின் ஒற்றுமையை உணர்த்தினர்.