• Fri. Jan 24th, 2025

MLA செந்தில்நாதன் காவல் கண்காணிப்பாளரிடம் மனு

ByG.Suresh

Jan 2, 2025

தன் மீது அவதூறு பரப்பும் வகையில் போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சிவகங்கை அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தார்.

மாவட்ட கழக செயலாளரும் சிவகங்கை அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்நாதனை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அவதூறு பரப்பும் வகையிலும் சமுதாய பிரிவினையை ஏற்படுத்தி கலவரத்தை தூண்டும் விதமாக விளம்பர சுவரொட்டிகளை ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் இரவு நேரத்தில் ஒட்டியுள்ளதாகவும், சமூக ஒற்றுமை சீர்குலைக்கும் விதமாக மோதலை தூண்டுகின்ற வகையில் போஸ்டர்கள் ஒட்டியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிமுக மாவட்ட கழக செயலாளர் செந்தில்நாதன் எம்எல்ஏ கழக நிர்வாகிகளுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷிடம் மனு அளித்தார். இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், நகரச் செயலாளர் ராஜா, மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் இளங்கோவன், ஒன்றியச் செயலாளர்கள் செல்வமணி, கோபி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப மாவட்ட செயலாளர் குழந்தைசாமி உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.