மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சந்தேகத்திற்கு இடமாக பிக்கப் வேனை நிறுத்தி சோதனை செய்ததில் பெங்களூரில் இருந்து பிக்கப் வேன் வாகனத்தில் 700 கிலோ புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக கொண்டு வந்தது தெரிந்தது.

இதனை அடுத்து புகையிலை பொருட்களை கடத்தி வந்த கரூரைச் சேர்ந்த கனகராஜ், மணிவண்ணன் ஆகிய 2 பேரை வாடிப்பட்டி காவல்துறையினர் கைது செய்து புகையிலை பொருட்கள், வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.






